Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ வீரர்களை கொன்றதாக கூறியுள்ள கருணாவின் உரை பாரதூமானதெனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், கருணாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
கருணா அம்மான் பாரதூரமான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். மொட்டுக் கட்சியின் பிரதான பொறுப்பை வகிப்பவர் என்ற வகையில் இந்த உரை தொடர்பில், நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். இராணுவத்தை கொன்றவர் மொட்டுக் கட்சியில் அங்கம் வகிப்பதும் பாரதூரமானதெது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியை வெளியிடுவதாக, அகிலவிராஜ் இதன்போது தெரிவித்தார்.
மேலும், அரசாங்கமும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், கருணாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025