Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருணா அம்மான் இராணுவத்தினரை கொன்றதாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானதென சாடும் அமைச்சர் விமல் வீரவன்ச, தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் சாடினார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த அமைப்பிலிருந்து விலகியிருக்கவும், பயங்கராவாத கொள்கைகளை கைவிட்டுச் செயற்படவும் அதிகாரம் உள்ளதெனவும் தெரிவித்தார்.
ஜே.வி.பியின் செயலாளரான டில்வின் சில்வா தனது தோள் மீது ஆயுதங்களை சுமந்து சென்ற போதே வாத்துவ ரயில் நிலையத்தில் வைத்து இராணுத்தினராக பிடிக்கப்பட்டார் என்றும், அதனால் தற்போதும் டில்வின் சில்வாவுக்கு அரசியல் செய்ய அதிகாரமில்லை எனக் கூறமுடியாது என்றார்.
ஆனால், தாம் பயங்கரவாத அமைப்புகளில் இருந்த காலத்தில் செய்த வீரச் செயல்களை மீண்டும் பெருமையாக கூறிக்கொள்ள முயற்சிப்பது ஏற்புடையதைல்லவென தெரிவித்த அவர், கருணா அம்மான் தற்பொதைய சந்தர்ப்பத்தில் நிகழ்த்தியுள்ள உரை மட்டமானதெனவும் சாடினார்.
தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது எத்தனை இராணுவத்தினரை கொன்றார் என்பதை பெருமையாக கூறிக்கொள்ளும் கருணா அம்மானை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்றும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025