2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா இன்னும் சமூக தொற்றாகவில்லை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா தொற்று இதுவரை சமூக தொற்றாகவில்லை என, தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறந்த சுகாதார கட்டமைப்பு இருப்பதால் கொரோனா தொற்றுக்கு முகம் கொடுக்கவும் அதனைக் கட்டுப்படுத்தும் நிலை காணப்படுவதாகவும் எனவே தொற்றாளர்களுக்கு ஒருபோதும் அசௌகரியம் ஏற்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட மற்றும் பேலியாகொட கொரோனா கொத்தனி பாரியதொன்றென்றும், இதன்மூலம் நாட்டின் பல பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென்றும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .