2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கூரையிலிருந்து இறங்கிய கைதிகள்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் கடந்த 8 நாள்களாக கூரைமீதேறி போராட்டத்தை  முன்னெடுத்து வந்த கைதிகள், இன்று காலை தமது போராட்டத்தை கைவிட்டு, கூரையிலிருந்து இறங்கியுள்ளனர்.

குறித்த சிறைச்சாலையின் 15 கைதிகள் 'A' மற்றும் 'C' கூடங்களின் கூரை மீதேறி நவம்பர் மாதம் 23ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது வழக்குகளை துரிதப்படுத்தல், பிணையில் விடுவித்தல் உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை முன்வைத்து, இக்கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


எனினும் 'C' சிறைக்கூடத்தின் கூரைமீதேறி போராட்டத்தை முன்னெடுத்த 10 கைதிகளும் 26ஆம் திகதி தமது போராட்டத்தை கைவிட்ட நிலையில்,ஏனைய 5 கைதிகள் மாத்திரம் 8ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், இன்று கைவிட்டுள்ளனரென சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .