Editorial / 2021 ஜனவரி 25 , மு.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாசூரி, கலாநிதி எட்வின் ஆரியதாஸவின் இறுதிக் கிரியைகள், பூரண அரச மரியாதையுடன் இன்று (25) முன்னெடுக்கவுள்ளன.
இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகரும் ஊடகவியலாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கலாநிதி எட்வின் ஆரியதாஸவை 'நடமாடும் நூலகம்' என்ற பெயரிலேயே அழைப்பர்.
தன்னுடைய 99 ஆவது வயதை டிசெம்பர் மாதம் 3ஆம் திகதியன்று கொண்டாடிய அவர், 22ஆம் ஜனவரி திகதியன்று காலமானார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர், மக்கள் விருது, ஊடக விருது, தேசிய விருது உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுக்கொண்டவர்.
அன்னாரது பூதவுடல், பூரண அரச மரியாதையுடன், பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில், அதற்கான ஏற்பாடுகளை வெகுஜன தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago