Nirosh / 2020 நவம்பர் 28 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கில் மாகாணத்தில் மேலும் 177 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, அம்மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும், அம்பாறையில் 08 தொற்றாளர்களும் கல்முனையில் 65 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடி வேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தொற்றின் பாதிப்பு காணப்படுகின்றது.இதனால் இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் தேவையற்ற நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதுடன் அத்தியாவசிய தேவை தொடர்பில் இம்மூன்று பகுதி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் தெரிவித்தார்.
56 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025