2021 மார்ச் 03, புதன்கிழமை

கொழும்பில் போக்குவரத்து மட்டுப்பாடு

R.Maheshwary   / 2021 ஜனவரி 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான முன்னாயத்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை மறுதினத்திலிருந்து (30) பெப்ரவரி 3ஆம் திகதி வரை,சுதந்திர சதுக்க வளாகத்தில் குறித்த முன்னோட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், குறித்த தினங்களில் காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணிவரையும் சுதந்திர தினமான 4ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து பகல் 1 மணிவரையும் கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .