2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில்

S. Shivany   / 2021 ஜனவரி 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சம் நிலவுகிறது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 755 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 369 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணபபட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 124 பேரும், களுத்துறையில் 80 பேரும், கண்டியில் 23 பேரும், மாத்தளையில் 22 பேரும், காலியில் 18 பேரும், மாத்தறையில் 17 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் 15 க்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் கொவிட் தொற்று காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .