Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணமாகவுள்ள ஜோடியொன்று, திருமணத்துக்கான புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்திலுள்ள நக்கள்ஸ் வனப்பகுதியில் அமைந்துள்ள சேரஎல்ல நீர்வீழ்ச்சிக்குச் சென்று, செல்பி எடுக்க முயல்கையில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன மணமகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் சுழியோடிப் பிரிவால், காணாமல் போனவரின் சடலம் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மணமக்கள் இருவரும் தவறி விழுந்துள்ள நிலையில், அருகிலிருந்தவர்களால் மணப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஜோடி குருநாகல் பிரதேசத்திலிருந்து, திருமணத்துக்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்துக்கு இவர்கள் வருகைத் தந்துள்ளார்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago