2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிந்தெல்பிடிய மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும் ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலம் எட்டப்பட்டுள்ளது என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்று நீதிவான் குமாரி அபேரத்ன தெரிவித்தார். அதுவரையில் ஊடகவியலாளர் கிந்தெல்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும்  பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X