2026 மார்ச் 02, திங்கட்கிழமை

குண்டு துளைக்காத கார்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடிவு

Editorial   / 2018 ஜனவரி 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிப திகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய, குண்டுதுளைக்காத கார்களை, ஆழ்கடலில் மூழ்கடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.  

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து, உயிரைப் பாதுகாப்பதற்காக, கடந்த 40 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்ட குண்டுதுளைக்காத சுமார் 25 வாகனங்களே, இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன.   

இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் குரூசர் வாகனமும் அடங்குகின்றது.   

ஏனைய வாகனங்கள், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் ரகங்களைச் சேர்ந்தவைகளாகும்.   

இவ்வாறான வாகனங்களை, ஆழ்கடலில் தாழ்த்தும் நடவடிக்கைகளை, இலங்கைக் கடற்படையினர் முன்னெடுக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தாழ்த்தப்படவுள்ள வாகனங்களிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட ஏனைய உபகரணங்கள் அகற்றப்படுள்ளன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .