Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் பெறுமதியான பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே இவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்திய “வெலின்” என்ற கப்பலும் எதிர்வரும் நாட்களில் அழிக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில், குறைந்த பெறுமதியையே கொண்டிருந்ததால், அதனையும் ஆழ்கடலில் அழிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago