2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.


இதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .