Nirshan Ramanujam / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(புத்திமால் ருபேரு)
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது தனிப்பட்ட தொலைபேசிக்கான மாதாந்த கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தி, 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பினை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில், அவரையும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டாரவையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) அனுமதியளித்தது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க, இவர்கள் இருவரையும் தலா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மாதாந்த தனிப்பட்ட தொலைபேசிக் கட்டணமான 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் பணத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026