Editorial / 2018 மே 27 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான செய்தியை, “கோட்டாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த செய்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் குறித்த சொகுசு விடுதிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள நீர் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, தனது மனைவியின் பெயரில் உள்ள வீட்டைத் தவிர்த்து தனது பெயரில் உள்ள சொத்துக்கள் எவையேனும் இருந்தால் நிரூபித்துக்காட்டுங்களென சவால்விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
17 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
31 minute ago
2 hours ago