Editorial / 2019 ஒக்டோபர் 19 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசீம்)
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன்.
பிரதானமான முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .