2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

மருமகளுடன் உடலுறவு; வீறிட்டு அழுத குழந்தை; மாமனாரால் பயங்கரம்

S.Renuka   / 2026 மார்ச் 22 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த ஐந்து மாதப் பெண் குழந்தையை,    மாமனாரே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரம் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் கொலையாளிக்கும், அதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாய்க்கும் பொலிஸார் விலங்கு மாட்டியுள்ளனர். 

ராமச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் – சத்யவாணி தம்பதியினர் கடந்த மூன்று ஆண்டுகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமிழரசன் வேலைக்குச் சென்ற நேரங்களைப் பயன்படுத்திக் கொண்ட அவரது தந்தை ராஜனுக்கும், மருமகள் சத்யவாணிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்திற்கு மீறிய உறவு குறித்து குடும்பத்திற்குள் ஏற்கனவே சலசலப்புகள் நிலவி வந்தன. இந்நிலையில், கடந்த மார்ச் 18-ஆம் திகதி மதியம், தனது காம இச்சைக்கு இடையூறாக இருந்த 5 மாதப் பெண் குழந்தையை ராஜன் இரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். 

தன் கண்முன்னே குழந்தை கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சத்யவாணி, உண்மையைச் சொன்னால் கணவர் தன்னைத் தண்டிப்பார் என்ற அச்சத்தில் மாமனாரின் செயலை மறைக்கத் துணிந்தார்.

இருவரும் இணைந்து குழந்தையின் சடலத்தை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, எதுவுமே தெரியாதது போல நாடகமாடியுள்ளனர்.

வேலை முடிந்து வந்த தமிழரசன் குழந்தையைக் காணாமல் தேடியபோது, ராஜனும் சத்யவாணியும் மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர். இறுதியில் கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழரசன், ஊர் மக்களின் உதவியுடன் வேப்பனஹள்ளி பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் அடிப்படையில் சத்யவாணியிடம் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதல் விவகாரமும் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட கொடூர உண்மையும் ஒவ்வொன்றாக வெளிவந்தன.

தனது இன்பத்திற்குத் தடையாக இருந்த குழந்தையை ராஜன் கொன்றதும், அதற்குச் சத்யவாணி உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. தற்போது ராஜன் மற்றும் சத்யவாணி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமூகக் கட்டமைப்பைச் சிதைக்கும் இத்தகைய முறையற்ற உறவுகள், ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்ததோடு ஒரு குடும்பத்தையே அழித்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் தார்மீகக் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .