Janu / 2026 மார்ச் 22 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, மனித வலுவினால் இயங்கும் உடற்பயிற்சி இயந்திரத்தில் தொடர்ச்சியாக ஓடி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைக்கும் முயற்சியை கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆரம்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை (22) வரை 48 மணிநேரம் தொடர்ச்சியாக ஓடி, மூன்று புதிய கின்னஸ் உலக சாதனைகளை படைக்கத் தகுதி பெற்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இதற்கான வசதிகளை இலங்கை கடற்படை வழங்கியிருந்தது.
முதலாவது சாதனை: அவர் 12 மணித்தியாலங்களில் 100.36 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்துள்ளார். இதன் மூலம் 12 மணிநேரத்தில் 94.30 கிலோமீட்டர் ஓடிய தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இரண்டாவது சாதனை: தனது இரண்டாவது கின்னஸ் உலக சாதனை முயற்சியில், 24 மணிநேரத்தில் 190.55 கிலோமீட்டர் தூரம் ஓடினார். இதன் மூலம் 24 மணிநேரத்தில் 188.13 கிலோமீட்டர் என்ற முந்தைய கின்னஸ் உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மூன்றாவது சாதனை: தாய்நாட்டிற்கும் கடற்படைக்கும் சர்வதேச ரீதியில் பெருமை சேர்க்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை(22) காலை 10:00 மணிக்கு, அவர் 48 மணிநேரத்தில் 316.7 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்து புதிய கின்னஸ் உலக சாதனைக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவற்றுடன் மேலதிகமாக Manual Treadmill இல் 11 மணி 57 நிமிடம் 18 வினாடிகளில் அதிவேக 100 கி.மீ. ஓட்டம். 20 மணி 07 நிமிடம் 42 வினாடிகளில் அதிவேக 100 மைல் ஓட்டம். 44 மணி 40 நிமிடம் 24 வினாடிகளில் அதிவேக 300 கி.மீ. ஓட்டம் ஆகிய மூன்று சாதனைகளும் படைத்துள்ளார்.
இச்சாதனைகளும் கின்னஸ் உலக சாதனைகளாக அங்கீகரிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியான ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே படைத்துள்ள இந்த சாதனை, இலங்கை இளைஞர்களுக்கு மட்டுமல்லாது உலகிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
எம்.எச்.எம். சியாஜ்






16 minute ago
23 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
27 minute ago
34 minute ago