2026 மார்ச் 04, புதன்கிழமை

“சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது”

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவைப் பற்றி அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது. இவ்வாறான காட்டிக்கொடுப்புகள் மூலம் சமூகம், நாடு மற்றும் யுத்தத்தின் முடிவுகள் குறித்து குழப்பமான நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், ஜயஸ்ரீ மகா விகாரைக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் இராணுவத் தளபதியாக, சரத் பொன்சேகா கருத்து தெரிவிப்பதால் அதில் உண்மை இருக்கலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார். அவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இராணுவத் தளபதியொருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, "அது அவர்களின் உரிமை. அந்த மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எம்மவர்களுக்கு அதனை விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விட்டது" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .