Editorial / 2021 ஜனவரி 20 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன், அவ்வாறானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலரும் அதில் உள்ளடங்குவர்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.
கொக்கலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அவருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்தப் புகைப்படத்தை ரவூப் ஹக்கீம், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நேற்றுமாலை சூரிய அஸ்தமனத்தின் போது, வழக்கமான சோதனையில், தனது உடல் வெப்பநிலை, நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026