2024 மே 02, வியாழக்கிழமை

சர்வதேச விண்வெளிக் கலம் இலங்கையில் தென்படுகிறது

Editorial   / 2017 நவம்பர் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சர்வதேச விண்வெளிக் கலம், இலங்கையை, புதன்கிழமை மாலை 6:25க்குக் கடந்துள்ளது. அதனை, இலங்கைவாழ் பிரஜைகள் வெற்றுக்கண்களால் பார்க்கமுடிந்தது. இதேவேளை, அந்தக் கலமானது, எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் அவ்வப்போது தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விண்வெளிக் கலம், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது. இது மிக விசாலமானது எனவும் சர்வதேச சொத்தெனவும், விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,   

108 மீற்றர் விசாலமான இந்தக் கலம், பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றிவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சர்வதேச விண்வெளிக் கலத்தை வெற்றுக்கண்களால் பார்வையிடுவதற்கு, இலங்கைவாழ் பிரஜைகளுக்கு புதன்கிழமை சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே, அது தென்பட்டுள்ளது.   

அந்த நேரத்தில், சிவனொளிபாதமலையின் உச்சியில் இருந்தவர்கள், வெற்றுக்கண்களால் மிகத்தெளிவாகப் பார்த்துள்ளனர்.   

பாரி​ய வெளிச்சத்துடன், இலங்கையின் கிழக்குத் திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது.   
1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்தக் கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.   

இந்த விண்வெளிக் கலம், சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாகப் பயணிக்கக்கூடியது.  

இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களால் பார்வையிடமுடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,   

இதேவேளை, இந்தக் கலம், 24ஆம் திகதி அதிகாலை 5:04க்கு 29 பாகைக்கு மேலாக, வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென்,தென்கிழக்குத் திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.   

அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே, மேற்கு, வடமேற்குத் திசையில் தோன்றி, 11 பாகைக்கு ​மேலே வடக்குத் திசையில் 3 நிமிடங்களில் கடக்கும்.  அத்துடன், 25ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14க்கு, கிழக்குத் திசையில் 24 பாகைக்கு மேலே தோன்றி, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்குத் திசையில் மறையும்.  

ஞாயிற்றுக்கிழமை 26ஆம் திகதியன்று அதிகாலை 4:57க்கு தென்மேற்குத் திசையில், 18 பாகைக்கு மேலாகத் தோன்றி, தென் மற்றும் தென்மேற்கு திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .