R.Maheshwary / 2020 நவம்பர் 29 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 183 பேரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெலிக்கட சிறைச்சாலையில் 386 பேருக்கும் கொழும்பு சிறைச்சாலையில் 157 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தொற்றுக்குள்ளானவர்களுள் 119 பேர் குணமடைந்தள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026