2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சில பகுதிகளுக்கான முடக்கங்களில் தளர்வு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, களுத்துறை மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த  சில கிராமங்களின் முடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

 இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம மற்றும் பதுகம புதிய குடியிருப்புத் திட்ட கிராமங்களைத் தவிர்ந்த   அனைத்து கிராமங்களின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி  ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 23ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, அகலவத்த, பாலிந்தநுவர, வலலாவிட்ட ஆகிய பிரதேச செயலகங்களுக்குரிய 12 கிராமங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .