Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவனகல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நெலும்சிறி, உடமவ்வார, கிரிஇ;ப்பன்ஆர, குமாரகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1800 பேரை சுயதனிமைப்படு;த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொனராகலை பிரதேச சுகாதார பணிப்பாளர் எச்ஏ.வி. நிரோசன் தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை 24ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த வீரர் விடுமுறையில் செவனகலயிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளதுடன், அயல் கிராமங்களுக்கும் சென்றுள்ளதால், குறித்த கிராமங்களிலுள்ளவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த கடற்படை சிப்பாயின் மனைவி, குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச் க்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025