2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

சேவையை இலகுவாக்க புதிய தொலைபேசி இலக்கம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  மோட்டார் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஊடாக இலகுவாக சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
சேவையைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து, 24 மணிநேரமும் செயற்படக் கூடிய வகையில், இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, 0112-677877 என்ற புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னரும்  குறித்த திணைக்களத்தினால் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான தகவல்களை மோட்டார் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .