Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால், இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (30) நாவலப்பிட்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,
கடந்த 5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் ஜனாதிபதியும், பிரதமரும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதி கூறுவதை பிரதமரும், பிரதமர் கூறுவதை ஜனாதிபதியும் செய்வதில்லை என்றார்.
இந்தத் தேர்தலானது ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியிடும் தேர்தலாகவே தனக்கு விளங்குவதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த, எதிர்க்கட்சி ஒன்று இல்லாவிட்டால் அது மிகவும் சோம்பலை ஏற்படுத்தும் என்றார்.
தனது 50 வருட அரசியல் அனுபவத்தில் அனைத்து தேர்தல்களிலும் பாரிய போட்டி காணப்பட்டது. சவாலகவும் இருந்தது. எனினும் இம்முறை எவ்வித போட்டியும் எமக்கில்லை என்றார்.
2 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
26 Jan 2026