Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேண்டுமென, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
'வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்' என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இத்தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழுஇ தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுபான்மையினக் குழுக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago