Editorial / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார்.
இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, கடந்த 25ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்காக, அன்று (25) நடத்தப்பட்ட கூட்டத்திலேயே, அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டி- கண்ணொருவரையில். கடந்த 21ஆம் திகதியன்று இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் 250 பேர் ஏந்தியிருந்தனர். அதனையடுத்தே, இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாகியிருந்தது.
28 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
6 hours ago
6 hours ago