2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’சிங்களத்தில் தான் முதலில் எழுதவேண்டுமெனச் சட்டமில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:14 - 1     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காட்சிப்படுத்தப்படும் பாதாகைகளில், முதலில் தமிழில் எழுதுவது தவறில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், சிங்களத்தில்தான் முதலில் ​எழுதவேண்டும் எனச் சட்டமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகள் குறித்துத் தெரிவித்த கருத்துத் தொடர்பில், நேற்று (21) கருத்து வெளியிடுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, அப்பகுதியில் பாதாகைகளைக் காட்சிப்படுத்தும் போது, அவற்றில் முதலில் தமிழில் எழுவது தவறில்லை. சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், முதலில் சிங்கள மொழியில் எழுதலாம்.

"எமது நாட்டில் தமிழ், சிங்களம் என்ற இரண்டுமே, அரச கரும மொழிகளாகும். அதனால் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டமும் எங்கும் இல்லை. குறிப்பாக, நயினாதீவு என்பதை மொழிமாற்றம் என்ற பெயரில், 'நாகதீபய' என்று கூறவும் முடியாது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 1

  • மகாதேவா Wednesday, 22 August 2018 03:58 AM

    இது அமைச்சரது வெறும் கருத்தாக இருந்தால் மட்டும் போதாது! மிக முக்கிய பதவிகளில் அமர்ந்திருக்கும் அரச அதிகாரிகள் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லையே!! விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தேவைப்படும் இடங்களில் இதை சட்டபூர்வமாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர் முன்வருவாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .