Yuganthini / 2017 ஜூன் 25 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் நிதர்ஷன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்குரிய நாடாளுமன்ற கடிதத்தலைப்பில், சிவஞானம் சிறிதரன் என்ற முத்திரையுடன், அவரது கையொப்பத்துடன் கூடிய 22ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கடிதம் தொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இக்கடிதத்தில், வடக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன்.
நான் தமிழசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால், தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். காரணம், கட்சித் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.
அத்தோடு குற்றஞ் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.
அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த கடிதத்தை தான் அனுப்பவில்லை எனவும் கடிதத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக்கடிதம் வெளியிடப்பட்டதனூடாக, எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன். மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளேன், எனவும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago