Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவன் ஒருவரை பாரதூரமான முறையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வியாபாரி ஒருவருக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இந்த உத்தரவை இன்று (13) பிறப்பித்துள்ளார்.
கிருளப்பனை பூர்வாராம பகுதியை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 06 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் 06 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்தாவிட்டால் மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2013 - 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026