Niroshini / 2017 ஜூன் 10 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள் பிச்சை எடுக்கும் நிலைமை அதிகரித்து வரும் நிலைமையை கருத்தில்கொண்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக, கைதுசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிறுவர், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு அமர்த்தும் நபர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ய 14 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் 11 ஆண் சிறுவர்களும் 07 பெண் சிறுவர்களும் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் 4 பேர் சிறுவர் நன்னடத்தை இலத்திலும் 14 பேர் பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026