Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்ட போதே, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது.
அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்கியமான வணிக வசதி பிரச்சினைகளைத் தீர்ப்பது, சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago