2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

செப்புத் தொழிற்சாலையில் திருடியவரின் விளக்கமறியல் நீ​டிப்பு

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டியில் சீல் வைத்து மூடப்பட்டிருந்த செப்பு செப்புத் தொழிற்சாலையின் பூட்டை உடைத்து, திருடியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்​தேகநபரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

சங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இன்ஷாப் அஹமட்டின் தொழிற்சாலையின் பூட்டை உடைத்தே சந்தேகநபர் திருடியுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .