2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘செயற்றிட்டங்கள் தளர்வடைவதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தளர்வடைவதால், எதிர்வரும் நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தளர்வடையாமல் இருக்கும் என்றால் இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார்

இந்நிலையில், இந்தோனேஷியா, டுபாய், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர் என்றும் நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவுக்குற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்றும்  உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய, நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை என்றும் எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை தான் மீண்டும் கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .