2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சு.க உறுப்பினர் கைது

S. Shivany   / 2021 மார்ச் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நிக்கவெரட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நிக்கவெரட்டிய-புத்தளம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வைத்து, அவர் நேற்று(02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எவ்வித தடையும் இன்றி மணல் கொண்டு செல்வதற்காக, ஒரு டிப்பர் வண்டிக்கு 1000 ரூபாய் என்ற அடிப்படையில் 425,000 ரூபாயை அவர் இலஞ்சமாக பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   
  
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .