Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் டயானா கமகே, நாட்டைக் கொண்டுநடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,
எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமலேயே அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காகவே, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், 'ஒருவரை ஜனாதிபதியாக்கிவிட்டு அவரது கைகளைக் கட்டி ஆற்றில் வீசிவிட்டு நாம் நீந்துவது சரியா? அவர் மூழ்கும் வரை நாம் காத்திருக்கிறோம். நீங்கள் மூழ்கிவிடுங்கள் என்று நாம் கூறுகின்றோம். இது என்ன ஒரு நகைச்சுவை' என்றும் தெரிவித்தார்.
'நாட்டின் ஜனாதிபதிக்கு நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான அதிகாரங்கள் இருக்க வேண்டும். வெறும் நாம நிர்வாகியாக இருப்பதற்கு, ஜனாதிபதி ஒருவர் தேவையில்லை. எந்தக் கோழைக்கும் ஒரு பெயரைக் கொடுத்து அவரைத் தூண்டிவிட முடியும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவார்' என்றுத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .