Editorial / 2019 ஜனவரி 19 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்தோ ஞானசார தேரர், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, ஜனாதிபதியால் விடுதலை செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தேரரை, நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரரின் விடுதலை குறித்து, ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
நாட்டு மக்களுக்காகவும் சிங்கள பௌத்தர்களுக்காகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் என்று, அவர் செய்த சேவைகளைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தினத்தன்று, அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026