Editorial / 2020 ஜூலை 21 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு, அகில இலங்கை டெங்கு ஒழிப்பு பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சுரங்க தர்ஷன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இணைவாக நாடுபூராகவும் சேவையாற்றும் 1300 டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான எவ்வித நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கல், கிருமிதொற்று நடவடிக்கை, சமூகத்தினரை தெளிவுப்படுத்தல், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளிலிருந்தும் தமது சங்கத்தினர் விலகவுள்ளனரென, அகில இலங்கை டெங்கு ஒழிப்பு பிரிவு சங்கம் தெரிவித்துள்ளது.
3 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
26 Jan 2026