2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

டாக்டர் ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரபல பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி.இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார்.

இதேவேளை, டாக்டர் ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று  பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.(R.A)

  Comments - 0

 • Ossan Salam - Qatar Sunday, 20 June 2010 04:38 PM

  டாக்டர் சாகிர் நாயக் அவர்கள் எந்த மதத்தையும் சாடுபவரோ அல்லது நிந்திப்பவரோ அல்ல. மாறாக அவர் ஏனைய மதங்களுடன் இஸ்லாத்தை ஒப்பிட்டு பேசுகிறார். இப்படி ஒப்பிட்டு பேசுவதற்கு யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவருடன் விவாதிக்கவோ அல்லது அவரது கருத்துக்களை ஜீரணிக்கவோ நாதியற்ற பிரிட்டிஷ் போன்ற உலகின் ஏகபோக உரிமையாளர்கள் என நினைப்பவர்கள். டாக்டரை போன்ற அறிஞர்களை உள்ளே வரவிட மாட்டார்கள் அதற்காக உண்மை அழிந்துவிடுமா என்ன ?

  Reply : 0       0

  xlntgson Sunday, 20 June 2010 07:35 PM

  ஜாகிர்நாயக் தீவிரவாத கருத்துக்களை நியாயப்படுத்துகிறவரா என்று நான் அறியேன், ஆனால் அவர் இஸ்லாம் மார்க்கத்தை மட்டுமே முற்படுத்துகிறார் என்பதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் நபிகள் நாயகத்தின் உருவப்படத்தை வரைய ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது எவ்வகையில் நியாயம் ஆகும், பத்திரிக்கை(!) சுதந்திரம் என்றாலும் ஒரு மார்க்கத்திலே உருவப்படம் ஆகாதென்றால் மேன்மேலும் அவ்வாறான உருவப்படங்களை வேண்டுமென்றே கேலிசித்திரம் என்று கருத்து சுதந்திரம் என்று கூறிக்கொண்டே அழுத்திக் கொண்டிருந்தால் தனது நியாயத்தை கூறுவது எப்படி?

  Reply : 0       0

  sawmeer Monday, 21 June 2010 02:25 AM

  Dr Naik's statement, 11th June 2010: http://www.peacetv.tv/downloads/Dr Zakir Naik - Press Release.pdf

  Reply : 0       0

  fathima Monday, 21 June 2010 09:22 AM

  doctor zakir naik awarhal thanaha edaiyum urvakkiyo alladu katpanai seydo pesavilly maraha awar allahwin vedattai patrithan eduttu kooruruhindrar. islam kooriya padai unmaiyanadu adu evvida sandehattitkum idamatradu adanalthan awarai vivadattal veeltha nenaippawarhal thottru pohirarhal. British kooda adatkuttan payappaduhirado ennamo?

  Reply : 0       0

  fathima Tuesday, 22 June 2010 08:50 AM

  டாக்டர் சாகிர் நைக் அவர்கள் தானாக எதையும் உருவாக்கியோ அல்லது கற்பனை செய்தோ பேசவில்லை மாறாக, அல்லாஹ்வின் வேதத்தை பற்றித்தான் எடுத்து கூறுகின்றார்கள். இஸ்லாம் கூறிய பாதை உண்மையானது அது எவ்வித சந்தேகத்திற்கும் இடமற்றது அதனால்தான் அவரை விவாதத்தால் வீழ்த்த நினைப்பவர்கள் தோற்று போகிறார்கள். பிரிட்டிஷ் கூட அதற்குத்தான் பயப்படுகிறதோ என்னமோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X