2026 மார்ச் 05, வியாழக்கிழமை

‘டிசெம்பர்வரை காத்திருக்கவும்’

Yuganthini   / 2017 ஜூலை 17 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், டிசெம்பர் வரையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளதாக, அறிய முடிகின்றது.   

இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் இரண்டு விடயங்களை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்பது, பிரதான நிபந்தனையாகும். அவ்வாறு இல்லாவிடின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தங்களை அமர்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பது, இரண்டாவது விடயமாகும் என்றும் அறியமுடிகின்றது.   

இதேவேளை, இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடுத்த பேச்சுவார்த்தையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பங்குபற்றச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.   

எனினும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து எந்தவித உத்தியோகபூர்வத் தகவலும் வெளியாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதற்கு முன்னரே, இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .