Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவதென, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளுக்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், படுதோல்வியை சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஒரேயொரு தேசியப்பட்டியல் மட்டுமே கிடைத்தது.
தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்றத்துக்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பில் கட்சிக்குள் கயிறு இழுப்புகள் ஏற்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவை அனுப்பவேண்டும். கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசனத்தை அனுப்பவேண்டும். இல்லையேல் கட்சியின் சட்ட ஆலோசகர்களில் ஒருவரை அனுப்பவேண்டுமென யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த இழுபறியான நிலைமையால், கடந்த ஒன்றரை மாதங்களாக, ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் வெற்றிடம் நிரப்பப்படாமலே இருந்தது.
தேர்தலில் தோல்வியடைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களில் ஐவர், தங்களையே தேசியப் பட்டியலின் ஊடாக நியமிக்கவேண்டுமென, ரணில் விக்ரமசிங்கவிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை, அந்தக் கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் ஒரு சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, தேசியப் பட்டியலின் பெயர் பட்டியலில், முதலாவதாக இருப்பவருக்கே சந்தர்ப்பத்தை வழங்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத் தேர்தலின் போது, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கையளித்த தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பெயரை முதலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago