S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க- சீதுவை மேற்கு லியனகேமுல்ல கிராம சேவகர், தனது முகப் புத்தகத்தில் தவறான செய்தியை பதிவு செய்தமையால் மக்களிடையே பதற்ற நிலை உருவானது.
மேற்கு லியனகேமுல்ல மற்றும் வடக்கு லியனகேமுல்ல ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு லியனகேமுல்லையில் உள்ள விகாரையில் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
இதன் காரணமாகவே இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் அங்கு சென்றிருந்த நிலையில், மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, கட்டுநாயக்க 18 ஆம் கட்டையில் அமைந்துள்ள போதி ரத்னாராம விகாரையில் வடக்கு லியனகேமுல்ல கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் இரண்டு விகாரைகளில் தடுப்பூசி பெற்றுகொண்டனர்.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025