2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை

J.A. George   / 2021 மார்ச் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை நாரங்கல மலைப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த மலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றை கருத்திற்கொண்டு நாரங்கல மலைப் பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்க தடை விதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

உத்தரவை மீறி நாரங்கல மலைப் பிரதேசத்திற்கு உட்பிரவேசிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X