Gavitha / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் வீடுகளில், இன்று அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவித்தல் ஒட்டப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கெனவே ஒட்டப்பட்டு வந்த அறிவித்தலை, சில குடும்பங்கள் புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, எனவே, ஏற்கெனவே ஒட்டப்பட்ட அறிவித்தல் நோட்டீஸுக்கும் மேலதிகமாக, இன்னொரு நோட்டீஸ் ஒட்டப்படவுள்ளதாக அவர் கூறினார்.
புதிதாக ஒட்டப்படும் நோட்டீஸில், பிரதேச பொலிஸ் நிலைய இலக்கம், மருத்துவ சுகாதார அதிகாரிகளின் இலக்கம், பிரதேச செயலக இலக்கம் ஆகியவை உள்ளடக்கப்படுள்ளன என்றும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு வீடுகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் மீறி வெளியே செல்பவர்கள் அல்லது உள்ள நுழைபவர்கள், பிடியாணை இன்றி உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், அவசரத்தேவைகளுக்காக, சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்களை, உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் முதல் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப்படுத்தல் மய்யங்களுக்கு அழைத்துச் செல்லாமல், வீடுகளிலேயே சுய தனிமையில் வைத்திருக்கும் தீர்மானம், இந்த வாரம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
15 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
16 minute ago