2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

தனுன திலகரட்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துண்டுப்பிரசுரம்

Super User   / 2010 மே 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜுன் மாதம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை ஒட்டுமாறு  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இது தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களை  நீதிமன்ற வளாகம், பொதுஇடங்கள் மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் ஒட்டுமாறும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தனுன திலகரட்னவை சரணடையுமாறு 30 நாள் காலஅவகாசம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து தனுன திலகரட்ன நிதிக்கொள்வனவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு  கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X