2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

தபாலில் இலங்கை வந்த “காத்” போதைப் பொருள் சிக்கியது

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத பானம் (கீறின் டீ) என்ற பெயரில் எத்தியோப்பியா நாட்டிலிருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்ட “காத்” எனப்படும் போதைப்பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

20 கிலோகிராம்  போதைப்பொருள் அடங்கிய தபால் பொதி 2018, 2019ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றைப் பொறுப்பேற்க எவரும் வருகைத் தராதததால், அதனைத் திறந்த பார்த்த போது, போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் காத் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதியில் உள்ள  முகவரியைப் பயன்படுத்தி சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .