2020 ஜூலை 15, புதன்கிழமை

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிக்கு கைவிடப்பட்டது

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தபால்மா அதிபரால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து, பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகள் விநியோகத்தை காரணமாக கொண்டு நேற்று நள்ளிரவு முதல் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

இதற்கு முன்னர் குறித்த நடவடிக்கை, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X