2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

’தம்பானைக்கு யாரும் வர வேண்டாம்’

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பான ஆதிவாசிகள் கிராமத்தை சுற்றுலாப் பிரயாணிகளுக்காக திறந்து வைக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்​தோ தெரிவித்துள்ளார்.

ஆதிவாசிகளின் சுகாதார பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையின்றி தான் இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் உள்ளிட்ட ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ​கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குறைந்தளவு சுகாதார வசிகளையுடைய தமது மக்களைப் பாதுகாப்பதற்காக இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .