2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும்“

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் கேலி செய்கின்றனர். நாங்கள் எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.

“அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை.

“இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கின்றோம்” என்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X